IPC NEWS
இது இந்தியன் பிரஸ் கிளப் செய்தி போர்டல். ஆசிரியர்.எம்.சம்சுல்ஹுதா - பொதுச் செயலாளர் அவர்களால் வெளியிடப்பட்டது. ஏதேனும் கேள்விகள் இருந்தால் தொடர்பு கொள்ளவும் editoripcnews@gmail.com / whatsapp+91-86809 52890
Sunday, 15 September 2024
இன்றைய செய்திகள்
Tuesday, 19 July 2022
Monday, 18 July 2022
''தமிழ்நாடு திருநாள் ஜூலை - 18 " விழா
இன்று ( 18.07.2022) மெரினா கடற்கரையில் , தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் " தமிழ்நாடு திருநாள் ஜூலை - 18 " விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை நீர்வளத் துறை அமைச்சர். துரை முருகன்,தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,செய்தித் துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் சைதை மு.மகேஷ்குமார் ஆகியோரிடம் பார்வையிட்டபோது
கள்ளக்குறிச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வு
கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களை அருகேயுள்ள அரசு பள்ளியில் சேர்க்கலாமா என ஆலோசனை.
இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் - மு.க.ஸ்டாலின் வாக்குபதிவு
தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவைச் செயலகக் குழுக் கூட்ட அறையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தலில் தனது வாக்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செலுத்தினார்
Sunday, 17 July 2022
தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது.. தனியார் பள்ளிகளின் சங்கம் அறிவிப்பு
தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது..
கள்ளக்குறிச்சி பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டத்தையும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு நர்சரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
4வது நாளான இன்று அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு மெட்ரிகுலேசன், சிபிஎஸ்இ, நர்சரி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.
Friday, 8 July 2022
Wednesday, 6 July 2022
பிரம்மாண்ட வளர்ச்சிக்கு பின்பு ஆரம்பமான மெகா வீழ்ச்சி
இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 5-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அதனால் 2 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்தது – இந்தியாவை தோற்கடித்து மிரட்டல் வெற்றி பெற்ற இங்கிலாந்து 2 – 2 என்ற தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் எப்போதும் ராஜாதான் என நிரூபித்தது. மறுபுறம் அனுபவமில்லாத பும்ரா தலைமையில் முதல் 3 நாட்களில் அசத்திய இந்தியா கடைசி 2 நாட்களில் சொதப்பி 2007க்கு பின் இங்கிலாந்து மண்ணில் 15 வருடங்கள் கழித்து டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.
இப்போட்டியில் இந்தியா வெல்லும் என்று 100% நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் காணப்பட்டனர். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி இன்னிங்சில் 200 ரன்களை துரத்துவதே சிம்ம சொப்பனம் என்ற நிலையில் இதற்குமுன் வரலாற்றில் 350க்கும் மேற்பட்ட இலக்கை நிர்ணயித்த எந்த போட்டிகளிலும் இந்தியா தோற்றதே கிடையாது. மேலும் சமீப காலங்களில் வெளி நாடுகளில் இந்தியா பதிவு செய்துள்ள வரலாற்று வெற்றிகளும் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தன. இந்த அத்தனை நம்பிக்கைகளுக்கும் முக்கிய காரணம் முன்னாள் கேப்டன் விராட் கோலி என்றுதான் கூறவேண்டும்.
மேலும் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது ஒருமுறை கூட வெளிநாடுகளில் 3 முறை இந்தியா தொடர்ச்சியாக தோற்றதில்லை. ஆனால் இந்த ஒரே வருடத்தில் களமிறங்கிய 3 வெளிநாட்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிரடியாகக் குறைந்தது
உலகம்
முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி, தங்கத்தில் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதனால் இந்தியாவில் அதிக அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில்
கடந்த மே மாதத்தில் மட்டும்
107 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
கடந்த மே மாதத்தில் 600 கோடி
டாலர் மதிப்புக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் , தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீதான சுங்க வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது . வரி உயர்த்தப்பட்டதால் கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்தது .
அதன்படி இந்த மாதத்தின் (ஜூலை) முதல் நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 அதிரடியாக அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம், 38,280 ரூபாய்க்கு விற்பனையானது. ஒருகிராம் 4,785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விலை அதிகரித்து வந்தது.
இன்றைய செய்திகள்
ஆதார் அட்டை புதுப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 14வரை நீட்டிப்பு. சமூக ஆர்வலர் கோவிந்தராஜனுக்கு பொதுமக்கள் பாராட்டு. அகில இந்திய காங்கிரஸ் பொத...
-
தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது.. கள்ளக்குறிச்சி பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டத்தையும...
-
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி , தங்கத்தில் முதலீடுகளை மாற்றி வருகின்றனர் . இதனால் ...