உலகம்
முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி, தங்கத்தில் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதனால் இந்தியாவில் அதிக அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில்
கடந்த மே மாதத்தில் மட்டும்
107 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
கடந்த மே மாதத்தில் 600 கோடி
டாலர் மதிப்புக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் , தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீதான சுங்க வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது . வரி உயர்த்தப்பட்டதால் கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்தது .
அதன்படி இந்த மாதத்தின் (ஜூலை) முதல் நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 அதிரடியாக அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம், 38,280 ரூபாய்க்கு விற்பனையானது. ஒருகிராம் 4,785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விலை அதிகரித்து வந்தது.
No comments:
Post a Comment